போலீசாருக்கு நவீன ரோந்து வாகனங்கள்
கோவை மாநகர போலீசாருக்கு நவீன ரோந்து வாகனங்கள் விரைவில் வழங்கப்படுகிறது.
கோவை
கோவை மாநகர போலீசாருக்கு நவீன ரோந்து வாகனங்கள் விரைவில் வழங்கப்படுகிறது.
போலீசார் ரோந்து
கோவை மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க இரவு நேரத்தில் போலீசார் வாகனங்களில் சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
போலீசாருக்கு வழங்கப்பட்ட ரோந்து வாகனங்கள் பழுதடைந்தன. எனவே போலீசார் குறித்த நேரத்தில் போலீசார் சம்பவ இடத்துக்கு செல்ல முடியவில்லை.
இதையடுத்து போலீசாருக்கு ரோந்து செல்ல புதிய வாகனங்கள் வாங்கப்பட்டன. அவை சென்னையில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டன.
தற்போது அந்த வாகனங்கள் கோவை பி.ஆர்.எஸ். பயிற்சி பள்ளி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
17 நவீன வாகனங்கள்
கோவை மாநகர போலீசுக்கு ரோந்து பணியை மேற்கொள்ள ஜி.பி.எஸ். வசதி உள்பட நவீன வசதிகளுடன் கூடிய 17 ரோந்து வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளது. இந்த வாகனங்கள் சிவப்பு நிறத்தில் உள்ளன.
இந்த ரோந்து வாகனத்தில் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் ஆகியோர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இதனை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் விரைவில் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு வழங்க உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story