பெண் அடித்துக்கொலை
ஆர்.எஸ்.மங்கலத்தில் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலத்தில் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி அடித்துக்கொலை
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு செட்டியமடையை சேர்ந்தவர் சந்தியாகு(எ) சந்திரசேகர்(வயது 85). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருடைய மனைவி ஞானசவுந்தரி(80). இவர்களது 3 மகள்களும் வெளியூரில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சந்திரசேகர் டிபன் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்து உள்ளார். அதன்பிறகு வீட்டிற்கு திரும்பி சென்ற போது அங்கு அவரது மனைவி ஞானசவுந்தரி படுக்கை அறையில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்து உள்ளார். இதை பார்த்து அவர் அலறி உள்ளார். அக்கம்பக்கத்தினர் இது குறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கணவரிடம் விசாரணை
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ஞானசவுந்தரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ேபாலீஸ் மோப்ப நாய் ஜூலி வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய் அந்த பகுதியில் மோப்பம் பிடித்து விட்டு வீட்டில் இருந்து பரம்பை ரோடு வழியாக ஆர்.எஸ்.மங்கலம் பஸ் நிலையம் சென்று விட்டு, மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு வந்தது.
போலீசாரிடம், சந்திரசேகர், தான் வீட்டிற்குள் நுழையும் போது ஒருவர் வீட்டில் இருந்து வெளியே கதவை திறந்து ஓடியதாக கூறி இருக்கிறார். மேலும் தங்களுக்கு வழக்கமாக செட்டியமடை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் டிபன் வாங்கி கொடுப்பார் என கூறி உள்ளார். இதன் பேரில் போலீசார் தங்கள் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.
இருப்பினும் சந்திரசேகரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அவரது மகள் தமிழ்செல்வி(60) போலீசில் புகார் தெரிவித்து உள்ளார். அதன்பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story