நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,981 மனுக்கள் ஏற்பு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,981 மனுக்கள் ஏற்பு
x
தினத்தந்தி 7 Feb 2022 7:01 PM IST (Updated: 7 Feb 2022 7:01 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,981 மனுக்கள் ஏற்கப்பட்டன.

வேட்புமனு தாக்கல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது. மொத்தம் உள்ள 277 வார்டுகளில் போட்டியிட 2 ஆயிரத்து 18 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 37 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1,981 மனுக்கள் ஏற்கப்பட்டது.

தாம்பரம் மாநகராட்சியில் மொத்த வார்டு-70, இதில் 834 பேர் வேட்புமனு தாக்கல், 14 வேட்புமனுக்கள் நிராகரிப்பு.

செங்கல்பட்டு நகராட்சியில் மொத்த வார்டு- 33, இதில் 193 பேர் வேட்புமனு தாக்கல் 9 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு. மதுராந்தகம் நகராட்சியில் மொத்த வார்டு-24. இதில் 149 பேர் வேட்புமனு தாக்கல். 4 வேட்புமனுக்கள் நிராகரிப்பு. மறைமலைநகர் நகராட்சியில் மொத்த வார்டு-21, இதில் 151 பேர் வேட்புமனு தாக்கல், ஒரு வேட்புமனு நிராகரிப்பு.

மாமல்லபுரம் பேரூராட்சி

நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி மொத்த வார்டு-30, இதில் 177 பேர் வேட்புமனு தாக்கல் 2 மனுக்கள் நிராகரிப்பு. அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் மொத்த வார்டு-15, இதில் 76 பேர் வேட்புமனு தாக்கல். 2 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இடைக்கழிநாடு பேரூராட்சியில் மொத்த வார்டு-21. இதில் 119 பேர் வேட்புமனு தாக்கல். அனைத்து வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன. கருங்குழி பேரூராட்சியில் மொத்த வார்டு-15. இதில் 69 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டன. மாமல்லபுரம் பேரூராட்சியில் மொத்த வார்டு-15. இதில் 86 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மொத்த வார்டு-18. இதில் 93 பேர் வேட்புமனு தாக்கல். 2 வேட்புமனுக்கள் நிராகரிப்பு.

திருப்போரூர் பேரூராட்சியில் மொத்த வார்டு-15. இதில் 71 பேர் வேட்புமனு தாக்கல். ஒரு வேட்புமனு நிராகரிப்பு.


Next Story