வாலிபரை மிரட்டி பணம் பறிப்பு


வாலிபரை மிரட்டி பணம் பறிப்பு
x
தினத்தந்தி 7 Feb 2022 8:09 PM IST (Updated: 7 Feb 2022 8:09 PM IST)
t-max-icont-min-icon

வாலிபரை கத்திமுனையில் மிரட்டி பணம் பறிமுதல் செய்தனர்.

கல்பாக்கம் சதாம் உசேன் நகர் பகுதியில் வசித்து வருபவர் பரூக் அப்துல்லா (வயது 23). இவர் கடந்த 3-ந் தேதி இரவு தனது வீட்டில் தூங்கி் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் பரூக் அப்துல்லாவின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பரூக் அப்துல்லாவை எழுப்பி கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த ரூ.3 ஆயிரத்து 500-ஐ பறித்து சென்றனர். இதுகுறித்து கல்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பரூக் அப்துல்லா புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்- இன்ஸ்பெக்டர் அறிவழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வேலூர் மாவட்டம், எட்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணகுமார் (வயது 46), அவருடைய நண்பர் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சரத்குமார்(28) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ 3 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்தனர் கைது செய்யபட்ட சரவணக்குமார் வக்கீல் என்பதும் அவர் மீது பல வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.


Next Story