செல்போன் மாயமானதால் விரக்தியடைந்த தொழிலாளி தற்கொலை
திண்டுக்கல் அருகே செல்போன் மாயமானதால் விரக்தியடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல்லை அருகே உள்ள பித்தளைப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் கருப்பையா. அவருடைய மகன் வடிவேல்குமார் (வயது 23). கூலித்தொழிலாளி. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விலை உயர்ந்த செல்போன் ஒன்றை வாங்கினார். அந்த செல்போன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமானது. இதனால் வடிவேல்குமாரை அவரது பெற்றோர் கண்டித்தனர். செல்போன் மாயமானதால் வடிவேல்குமார் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு, தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் வடிவேல்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வடிவேல்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த தற்கொலை குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story