ஆனைமலை அருகே தொழிலாளியை கொன்ற நண்பர் கைது


ஆனைமலை அருகே தொழிலாளியை கொன்ற நண்பர் கைது
x
தினத்தந்தி 7 Feb 2022 11:21 PM IST (Updated: 7 Feb 2022 11:21 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை அருகே கூலி தொழிலாளியை கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.

ஆனைமலை

ஆனைமலை அருகே கூலி தொழிலாளியை கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர். 

தொழிலாளி

ஆனைமலையை அடுத்த கோட்டூரை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 34). அதுபோன்று திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் கேப்டன் என்கிற செல்வராஜ் (44). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இவர்கள் தேங்காய் உரிக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். 

இந்த நிலையில் 2 பேரும் ஆனைமலை அருேக உள்ள திவான்சா புதூரில் தோட்டத்திற்கு தேங்காய் உரிக்க சென்றனர். பின்னர் வேலை முடிந்ததும் 2 பேரும் மது அருந்தினர். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

அடித்து கொலை

இதில் 2 பேரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், அருகே கிடந்த கட்டையை எடுத்து மகாலிங்கம் தலையில் ஓங்கி அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய செல்வராஜை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஆலாங்கடவில் செல்வராஜ் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நண்பர் கைது

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வராஜை சுற்றி வளைத்து கைது செய்தனர். 


Next Story