காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்


காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 8 Feb 2022 6:27 PM IST (Updated: 8 Feb 2022 6:27 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை சென்னையில் இருந்து கார் மூலம் காஞ்சீபுரம் வந்தார். காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற அவரை, மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.சோமசுந்தரம், மாநில எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகி காஞ்சி பன்னீர்செல்வம், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் வீ. வள்ளிநாயகம், பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் வி.பாலாஜி, மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மார்க்கெட் வி.அரிக்குமார் உள்பட பலர் வரவேற்றனர்.

சாமி தரிசனம் செய்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு கோவில் அர்ச்சகர்கள் பொன்னாடை அணிவித்து கோவில் பிரசாதங்களை வழங்கினார்கள்.


Next Story