மறைமலைநகர் அருகே வீட்டில் குப்பை எரிக்கும் போது தீக்காயமடைந்த பெண் சாவு
மறைமலைநகர் அருகே வீட்டில் குப்பை எரிக்கும் போது தீக்காயமடைந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
குப்பைகளை எரிக்கும்போது...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள சட்டமங்கலம் பிரியா நகர் பகுதியை சேர்ந்தவர் அனிதாதேவி (வயது 39), இவர் கடந்த 2-ந்தேதி வீட்டில் குப்பைகளை எரித்து கொண்டிருந்தார்.
அப்போது அதில் இருந்த நெருப்பு பொறி அவரது உடலில் பட்டு எரிந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
சாவு
இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story