காதல் தோல்வியால் பால்காரர் தற்கொலை


காதல் தோல்வியால் பால்காரர் தற்கொலை
x
காதல் தோல்வியால் பால்காரர் தற்கொலை
தினத்தந்தி 8 Feb 2022 8:52 PM IST (Updated: 8 Feb 2022 8:52 PM IST)
t-max-icont-min-icon

காதல் தோல்வியால் பால்காரர் தற்கொலை

கருமத்தம்பட்டி

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது  மகன் சரவணக்குமார் (வயது26). இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார்.அதேபகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார். 

இதனையடுத்து திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்த அவர்கள் திடீரென மாயமானார்கள். இதற்கிடையே தனது மகளை காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் அவர்கள் கொடைக்கானலில் தங்கியிருப்பது தெரியவந்தது. 

அவர்கள் இருவரையும் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அந்த இளம்பெண் தன்னுடைய பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார். இதனால் போலீசார் அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். 

காதல் தோல்வியால் சரவணக்குமார் விரக்தியுடன் காணப்பட்டுள்ளார். இதனால் சம்பவத்தன்று மனம் உடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Next Story