இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடும் மர்ம ஆசாமிகள்


இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடும் மர்ம ஆசாமிகள்
x
தினத்தந்தி 9 Feb 2022 3:47 PM IST (Updated: 9 Feb 2022 3:47 PM IST)
t-max-icont-min-icon

இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடும் மர்ம ஆசாமிகள்

திருப்பூர் பெரியார்காலனி மற்றும் சுற்று வட்டாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் அந்த பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்களும் உள்ளன. இதனால் அப்பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியாக காணப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் மர்ம நபர்கள் பெட்ரோலை திருடி செல்கின்றனர். மேலும் ஒருசில வாகனங்களில் உதிரிபாகங்களையும் கழட்டி விடுகின்றனர். குறிப்பாக பெரியார்காலனி 9வது வீதியில் அடுத்தடுத்த 2 நாட்களில் இரவு நேரத்தில் 5க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடி சென்றுள்ளனர். பெட்ரோல் திருடும் நபர்களை கண்டுபிடித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையம் அருகிலேயே இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடப்பதால் போலீசார் தீவிர ரோந்து பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story