கார் மோதி மாற்று திறனாளி முதியவர் பலி
கார் மோதி மாற்று திறனாளி முதியவர் பலி
கோவை
கோவை சிவானந்தா காலனி- கண்ணப்பன் நகரில் உள்ள பாலத்தின் அடியில் நேற்று மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக அந்த முதியவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இது குறித்து தகவலறிந்து வந்த அந்த முதியவரின் உறவினர்கள் கார் டிரைவரை முற்றுகையிட்டு ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் கார் டிரைவரை மீட்டு விபத்தில் பலியான முதியவரின் உறவினர்களை சமாதானம் செய்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், விபத்தில் பலியான முதியவர் ரத்தினபுரி பகுதியை சேர்ந்த நடராஜ் (வயது60) என்பதும், அந்த கார் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரின் கார் என்பதும், காரில் அவர் இல்லை என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் டிரைவர் குபேரன் (35) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story