வால்பாறை பகுதி மக்களின் எதிர்பார்ப்பு என்ன

வால்பாறை நகராட்சி தேர்தல் நடக்க உள்ளதால் தங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா என்ற எண்ணம் பொதுமக்களிடம் ஏற்பட்டு உள்ளது.
வால்பாறை
வால்பாறை நகராட்சி தேர்தல் நடக்க உள்ளதால் தங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா என்ற எண்ணம் பொதுமக்களிடம் ஏற்பட்டு உள்ளது.
வால்பாறை
மலைப்பிரதேசமான வால்பாறை 217 சதுர கி.மீ. பரப்பளவை கொண்டது. கடந்த 2010-ம் ஆண்டு வால்பாறை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. 58 ஆயிரத்து 708 வாக்காளர்கள் உள்ளனர். மக்கள் தொகையின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 859 உள்ளது.
இங்கு தேயிலை எஸ்டேட்தான் அதிகம். இந்த எஸ்டேட்டுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தமிழக-கேரள எல்லையில் அமைந்து உள்ள அழகான பகுதியான வால்பாறையில் செய்ய வேண்டிய பணிகள் அதிகமாக உள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
குண்டும் குழியுமான சாலை
வால்பாறையில் உள்ள பெரும்பாலானவர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்கள். எனவே இளைஞர் களுக்கு மாற்று தொழில் தொடங்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வால்பாறை பகுதியில் உள்ள பெரும்பாலான எஸ்டேட்டுகளுக்கு செல்லும் சாலை குண்டும்-குழியுமாக பயன்படுத்த முடியாத நிலையில்தான் இருக்கிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
இங்குள்ள அனைத்து எஸ்டேட் பகுதியிலும் தரமான ரேஷன் கடைகளை கட்டிக்கொடுக்க வேண்டும். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளை புதுப்பித்து கழிவறை வசதி ஏற்படுத்தி கொடுத்தால் உபயோகமாக இருக்கும்.
வால்பாறை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க வாகன நிறுத்தும் இட வசதியை செய்வதுடன், பயன்படாத நிலையில் இருந்து வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
நிரந்தர தீர்வு
வால்பாறை நகரில் நவீன வசதியுடன் கூடிய கழிப்பிடங்கள் அமைப்பதுடன், குடியிருப்பு பகுதிகளிலும் நடைபாதைகள், பாதுகாப்பு தடுப்பு சுவர்கள், நடைபாதை படிக்கட்டுகளை சீரமைத்து வாழைத்தோட்டம், கக்கன்காலனி, காமராஜ் நகர் பகுதியில் மழைக்காலத்தில் ஆற்றுத் தண்ணீர் வீடுகளுக்குள் புகுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.
வால்பாறை நகர் பகுதியை அழகுபடுத்தி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள். இதன் மூலம் நகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும்.
படகு இல்லம்
நகராட்சி சார்பில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள படகு இல்லம், தாவரவியல் பூங்கா பணிகளை முடித்து பயன் பாட்டுக்கு திறக்க வேண்டும். வால்பாறை மலைப்பகுதி என்ப தால் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்ட காசம் செய்வதை தடுக்க அனைத்து குடியிருப்புகளை சுற்றிலும் சோலார் மின்வேலியோ அல்லது அகழியோ அமைக்க வேண்டும்.
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூடங்களாக இருப்பதை நகராட்சி பள்ளிகளாக மாற்றி தேவையான கட்டிட வசதியை செய்து கொடுக்க வேண்டும். இங்குள்ள அரசு கல்லூரியில் வால்பாறை பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
நிறைவேற்ற வேண்டும்
அனைத்து தரப்பு மக்களை உறுப்பினர்களாக கொண்ட வால்பாறை நகராட்சி மேம்பாட்டு கூட்டமைப்பை உருவாக்கி, அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் வால்பாறை அழகான பகுதியாக மாறும். அதை புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள பிரதிநிதிகள் நிறைவேற்ற முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






