பொள்ளாச்சி அருகே சேதமடைந்த சாலையால் தொடரும் விபத்துகள்

பொள்ளாச்சி அருகே சேதமடைந்த சாலையால் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே உடனடியாக சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே சேதமடைந்த சாலையால் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே உடனடியாக சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மோசமான சாலை
பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை செல்லும் மெயின் ரோடு உள்ளது. இந்த ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்குள்ள சீனிவாசபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் உடைந்தது.
இதனால் சாலையில் தண்ணீர் வெளியேறியது. இதன் காரண மாக சாலை மோசமடைந்து குண்டும் குழியுமாக மாறியது. ஆனால் அந்த சாலையை அதிகாரிகள் சீரமைக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வாகன ஓட்டிகள் அவதி
இந்த வழியாகதான் ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், வளர்ந்தாய மரம் மற்றும் கேரளா உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை பழுதடைந்து மோசமாக காட்சியளிப்பதால் தினமும் விபத்து நடந்து வருகிறது.
இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
தொடரும் விபத்துகள்
குண்டும் குழியுமான இந்த சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குடிநீர் குழாயை சரிசெய்ய தோண்டப்பட்ட பள்ளத்தையும் அதிகாரிகள் இன்னும் சரிசெய்ய வில்லை. சாலையிலேயே மண்ணும் குவித்து வைக்கப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக அந்தப்பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன், விபத்துகளும் அதிகரித்துவிட்டன. அவசரமாக செல்ல வேண்டிய இடங்களுக்கும் வேகமாக செல்ல முடியவில்லை.
எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்த பகுதியை ஆய்வு செய்து உடனடியாக சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






