நெல் கொள்முதல் நிலையத்தை திறக்ககோரி விவசாயிகள் சாலைமறியல்
பெரியகளக்காட்டூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்ககோரி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகளக்காட்டூர் பகுதியில் உள்ள பெரும்பான்மையான மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த 6 மாதமாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டி போராட்டம் நடத்தி வந்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அரசு நெல் கொள்முதல் நிலையம் அந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டடத்தில் திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் தியாகராஜன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக உணவுத்துறை அதிகாரிகள் நெல் கொள்முதல் நிலையத்தை நேற்று மூடிவிட்டு சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்ககோரி தக்கோலம்-கனகம்மாசத்திரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த திடீர் சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story