சென்னை காசிமேடு துறைமுகம் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்படும்: மத்திய மந்திரி முருகன்


சென்னை காசிமேடு துறைமுகம் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்படும்: மத்திய மந்திரி முருகன்
x
தினத்தந்தி 13 Feb 2022 5:32 PM IST (Updated: 13 Feb 2022 5:32 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து தேவனேரி மீனவர் பகுதியில் மத்திய மீன்வளத்துறை மந்திரி எல்.முருகன் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தினமும் பிடித்து வரப்படும் மீன்களை ஐஸ் பெட்டியில் வைத்து பாதுகாப்போடு ஏற்றுமதி செய்யும் வசதியை மோடி அரசு செய்து கொடுத்துள்ளது. இந்த துறைமுகத்தை சர்வதேச தரத்துக்கு இணையாக மேற்படுத்துவதற்கான பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.

வெளிநாடுகளில் எப்படி இருக்கிறதோ அதேபோல் இந்தியாவில் முதல்கட்டமாக சென்னை காசிமேடு, விசாகப்பட்டினம், கொல்கத்தா, கொச்சின் உள்ளிட்ட 5 பெரிய மீன்பிடி துறைமுகங்கள் சர்வதேச தரத்தில் மேம்படுத்துவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

மத்திய அரசு தற்போது நாடு முழுவதும் உள்ள மீனவர் நலனுக்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி மூலம் மீனவர்களுக்கு பல்வேறு கட்டமைப்பு வசதிகளும், மீன்பிடி தொழிலை மேம்படுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story