ஆலந்தூரில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் இப்ராகிம் பிரசாரம்: இஸ்லாமிய அமைப்பினர் கடும் எதிர்ப்பு


ஆலந்தூரில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் இப்ராகிம் பிரசாரம்: இஸ்லாமிய அமைப்பினர் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 13 Feb 2022 5:45 PM IST (Updated: 13 Feb 2022 5:45 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள 160, 161 ஆகிய வார்டுகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பா.ஜ.க. தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் பிரசாரம் செய்தார்.

ஆலந்தூர் புதுத்தெருவில் ஓட்டுகேட்ட ஊருக்குள் சென்ற அவர், பின்னர் ஆலந்தூர் அழகிரி தெருவிற்குள் பிரசாரம் செய்ய வந்தார். அப்போது போலீஸ் துணை கமிஷனர் பிரதீப், உதவி கமிஷனர் அமீர் அகமது ஆகியோர் இந்த இடங்களில் பிரசாரம் செய்ய உரிய அனுமதி பெறவில்லை என்று கூறி அவரை தடுத்து நிறுத்தினர்.

ஓட்டு சேகரிப்பை முடித்த பின்பு, அவர் காரில் செல்ல தயாரான போது எஸ்.டி.பி.ஐ., த.மு.மு.க. உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் அங்கு வந்து வேலூர் இப்ராகிமை எதிர்த்து கோஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் இஸ்லாமிய அமைப்புகளை தடுத்து நிறுத்திய நிலையில், வேலூர் இப்ராகிம் காரில் புறப்பட்டு சென்றார்.


Next Story