‘நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி தபால் அலுவலகம் முற்றுகை


‘நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தபால் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 14 Feb 2022 10:52 PM IST (Updated: 14 Feb 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி ஆதித்தமிழர் கட்சி சார்பில் தேனியில் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி: 

ஆதித்தமிழர் கட்சி சார்பில், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், ‘நீட்’ தேர்வு மசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னரை கண்டித்தும் தேனி தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இதற்கு மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முல்லைஅழகர் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர், தபால் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பிறகு  ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story