3 பேரை சி.பி.சி.ஐ.டி. காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி


3 பேரை சி.பி.சி.ஐ.டி. காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 15 Feb 2022 11:15 PM IST (Updated: 15 Feb 2022 11:15 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் அரசு நிலம் அபகரிப்பு வழக்கில் கைதான 3 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

தேனி: 

பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர் அரசு நிலம் அபகரிக்கப்பட்டது தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பெரியகுளம் ஒன்றிய முன்னாள் அ.தி.மு.க. செயலாளர் அன்னப்பிரகாஷ், நில அளவையர் பிச்சைமணி, பெரியகுளம் மண்டல துணை தாசில்தாரின் உதவியாளர் அழகர் ஆகிய 3 பேரும் கடந்த 2-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 இந்நிலையில் அவர்கள் 3 பேரும் ஜாமீன் கேட்டு தேனி மாவட்ட தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி சுந்தரம் முன்னிலையில் இன்று  விசாரணைக்கு வந்தது.

மனுக்களை விசாரணை செய்த நீதிபதி, 3 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை நாளை மறுநாள்  (வியாழக்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும், அன்னப்பிரகாஷ், பிச்சைமணி, அழகர் ஆகிய 3 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். விசாரணை முடிந்தவுடன் மீண்டும்  நாளை மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அன்னப்பிரகாஷ் உள்பட 3 பேரையும் கோர்ட்டில் இருந்து விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்துச் சென்றனர்.


Next Story