நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்குச்சாவடிகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த நிலையில் நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயருடன் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. இதற்கிடையில் வாக்குபதிவு அன்று வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்களை தயார்ப்படுத்தும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
நகராட்சியில் உள்ள 89 வாக்குச்சாவடிகளுக்கும், சூளேஸ்வரன்பட்டி, ஜமீன்ஊத்துக்குளி, கோட்டூர், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம் பேரூராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. நகராட்சி அலுவலகத்தில் நடந்த பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் தாணுமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
80 வகையான உபகரணங்கள்
வாக்காளர் சீட்டு பட்டியல், போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல், வாக்குச்சீட்டுகள், பென்சில், வெள்ளை தாள், மெழுகுவர்த்தி, மின்னணு வாக்குபதிவு எந்திர சீல் வைக்கும் அரக்கு, ரப்பர் பேன்ட், உள்பட வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 80 உபகரணங்கள் பிரித்து வைக்கும் பணி நடைபெற்றது.
வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் அனுப்பும் போது, இந்த பொருட்களும் சேர்த்து அனுப்பப்படும். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக முககவசம் அணிந்து,
சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story