வால்பாறையில் கடும் வெயில் காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் 100 அடியாக சரிந்தது


வால்பாறையில் கடும் வெயில் காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் 100 அடியாக சரிந்தது
x
தினத்தந்தி 17 Feb 2022 4:43 PM IST (Updated: 17 Feb 2022 4:43 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் கடும் வெயில் காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் 100 அடியாக சரிந்தது.

வால்பாறை

வால்பாறையில் கடும் வெயில் காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் 100 அடியாக சரிந்தது.

சோலையாறு அணை

வால்பாறையில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆரம்பித்தத்தில் குறைவாகவும் பின்னர் தீவிரமடைந்து கனமழையாக பெய்தது. மேலும் தமிழக -கேரள மாநில கடலோர பகுதியில் ஏற்பட்ட புயல் மழை காரணமாகவும் அதிகப்படியான மழை கிடைத்தது. இதனால் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளுக்கும் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.
இதனால் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் சோலையாறு அணைக்கு விநாடிக்கு விநாடி தண்ணீர் வரத்து அதிகரித்தது. சின்னக்கல்லார், நீரார் அணைகளுக்கும் தண்ணீர் வரத்து ஏற்பட்டதால் அந்த அணைகளிலிருந்தும் சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து கிடைத்தது. இதனால் கடந்த ஜூன் மாதம் 21-ந்தேதி 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர் மட்டம் 100 அடியை தாண்டியது.

22 கன அடி தண்ணீர் 

தொடர்ந்து மழை பெய்ததால் ஜூலை 23-ந் தேதி சோலையாறு அணை தனது முழு கொள்ளளவான 160 அடியை எட்டியது. சோலையாறு அணை நிரம்பியதை முன்னிட்டு 3 மதகுகள் திறக்கப்பட்டு சோலையாறு அணைக்கு வந்த உபரி நீர் கேரளாவிற்கும் பரம்பிக்குளம் அணைக்கும் வெளியேற்றப்பட்டது. அன்றிலிருந்து நேற்று காலை 6 மணிவரை கிட்டத்தட்ட 241 நாட்களாக சோலையாறு அணை 100 அடியிலேயே இருந்து வந்தது. கிட்டத்தட்ட 138 நாட்களாக 160 அடியிலும் இருந்தது. இந்த நிலையில் வால்பாறை பகுதி முழுவதும் கடந்த 2 மாதமாக கடுமையான வெயில் வாட்டி வருவதால் நீராதாரங்களை ஏற்படுத்தி தரக்கூடிய ஆறுகள் எல்லாம் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டன. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் வெறும் 22 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.

100 அடியாக சரிந்தது

வால்பாறையில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருமழை அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் முடிந்தவுடன் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும். வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாவது வாரம் வரை நீடித்தது.
இதனால் சோலையாறு அணைக்கு எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு தண்ணீர் வரத்து கிடைத்தது. இதனால் கிட்டத்தட்ட 241 நாட்களாக 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் 100 அடியாக சரிந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story