14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டல் தொழிலாளி போக்சோவில் கைது
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டல் தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஆனைமலை
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டல் தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
14 வயது சிறுமி மாயம்
கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 7-ந் தேதி முதல் காணவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் இதுபற்றி ஆனைமலை போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த சிறுமி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். அங்கு அந்த சிறுமியை மீட்ட போலீசார் அச்சிறுமியை ஆனைமலை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
போக்சோவில் தொழிலாளி கைது
இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி ஆனைமலை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்துவரும் ஆனந்தகுமார் (வயது19) என்பவர் தன்னுடன் நெருங்கி பழகியதாகவும், பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார். பிறகு அவர் தன்னை பல்லடம் அருகே உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்த ஆனந்தகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதையடுத்து அவர் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெருந்துறையில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். மீட்டகப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு பின் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story