இரும்பு கம்பியால் மூதாட்டியை தாக்கிய தொழிலாளி கைது


இரும்பு கம்பியால் மூதாட்டியை தாக்கிய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 17 Feb 2022 11:24 PM IST (Updated: 17 Feb 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே இரும்பு கம்பியால் மூதாட்டியை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பாக ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கிணத்துக்கடவு



கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையம் சக்திநகரை சேர்ந்தவர் கார்த்திக். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (வயது 25). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கார்த்திக் அடிக்கடி மது குடித்துவிட்டு சங்கீதாமீது சந்தேகப்பட்டு குடும்பதராறில் ஈடுபட்டுவந்துள்ளார். சம்பவத்தன்று கார்த்திக்கின் தங்கை வனிதாவின் கணவர் கூலித்தொழிலாளியான ரமேஷ் (36) மற்றும் கார்த்திக் ஆகிய 2 பேரும் சங்கீதாவின் தந்தை ராஜேந்திரன் வீட்டிற்கு சென்று சங்கீதாவை பற்றி தகாத வார்தையால் பேசி தகராறில் ஈடுபட்டனர். பின்னர் 2 பேரும் சேர்ந்து இரும்புகம்பியால் ராஜேந்திரனை தாக்க முயன்றனர். அப்போது சங்கீதா அவரது பாட்டி பொன்னம்மாள் (80) ஆகிய 2 பேரும் தடுத்தனர். இதில் ரமேஷ் இரும்புகம்பியால் தாக்கியதில் பொன்னம்மாள் காயம் அடைந்தார். காயமடைந்த பொன்னம்மாள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கீதாவின் கணவர் கார்த்திக், உறவினர் ரமேஷ் ஆகியோர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரமேஷ் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள கார்த்திக்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story