திண்டுக்கல் மாநகராட்சி தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் 8-வது வார்டில் வீரமார்பன், 11-வது வார்டில் பொன்முத்து போட்டி
திண்டுக்கல் மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 8-வது வார்டில் வீரமார்பன், 11-வது வார்டில் பொன்முத்து போட்டியிடுகிறார்கள்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாநகராட்சி தேர்தலில் 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் எம்.வீரமார்பன் (48) போட்டியிடுகிறார். வீரமார்பன் பொறியியல் பட்டதாரி (சிவில்). திண்டுக்கல் நகர கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், உள்ளாட்சியில் அவருடைய தந்தையுடன் இணைந்து பணியாற்றியதால் அதிக அனுபவமுள்ளவர்.
இதே போல் திண்டுக்கல் மாநகராட்சி தேர்தலில் 11-வது வார்டு அ.தி.மு.க. பெண் வேட்பாளராக எஸ்.பொன்முத்து (44) போட்டியிடுகிறார். இவருக்கு திருமணமாகி கணவர் செந்தில்வேல் மற்றும் குழந்தைகள் இருவர் உள்ளனர். இவர் பி.எஸ்.சி. பட்டதாரி ஆவார்.
இவர்கள் இருவரும் சகோதர-சகோதரி ஆவர். இவர்களது தந்தை மருதராஜ், அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக உள்ளார். திண்டுக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு முதல் மேயராக பதவி வகித்தவர்.
நெடிய அரசியல் குடும்பத்தில் பிறந்த இவர்கள் தாங்கள் வெற்றி பெற்றால் தங்களது வார்டுகளில் முழுமையான அளவில் குறைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளனர்.
மேலும், வார்டில் உள்ள அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கினறனர். பெண் முன்னேற்றத்திற்கும், பெண் குழந்தைகள் தரமான கல்வி பயிலவும் தங்களால் ஆன உதவிகள் செய்வதாக கூறுகின்றனர்.
Related Tags :
Next Story