குடிநீர் தொட்டிகளில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் குடிநீர் தொட்டிகளில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியததில் வாரப்பட்டி, வதம்பச்சேரி, செஞ்சேரிப்புத்தூர், கள்ளப்பாளையம், ஜல்லிபட்டி, பாப்பம்பட்டி, அப்பநாயக்கன்பட்டிஉள்பட மொத்தம் 20 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் சுமார் 75 குடிநீர் மேல்நிலைத்தொட்டிகள், 40 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. இந்த குடிநீர் தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்குப ாதுகாப்பான குடிநீர் வழங்கசரியான அளவு பிளிச்சீங் பவுடர், குளோரின் மாத்திரைகள் போடப்பட்டுள்ளதா? என வட்டார சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், கார்த்திக்குமார், அப்துல் நசீர், சந்தோஷ்குமார் ஆகியோர் அந்தந்த பகுதி ஊராட்சி செயலாளர்களுடன் சென்று நேற்று தண்ணீர் பரிசோதனை கருவியுடன் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது, சுகாதார ஆய்வாளர்கள் குடிநீர் தொட்டி பராமரிப்பாளர்களிடம், 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் தொட்டிகள் சுத்தமாக கழுவி பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story