வாக்குச்சாவடிகளுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்
வாக்குச்சாவடிகளுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
வாக்குச்சாவடிகளுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்பு உபகரணங்கள்
கொரோனா பாதிப்பிற்கு இடையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு உபகரணங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் தாணுமூர்த்தி, நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசார், வாக்குச்சாவடி முகவர்கள், பொதுமக்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்குள் நுழையும் முன் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வாக்காளர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்க வேண்டும். வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்குள் நுழையும் முன் அங்குள்ள கிருமி நாசினி (சானிடைசர்) கொண்டு கைகளை சுத்தப்படுத்தவும், உடல் வெப்பநிலையை கண்டறிய சுகாதார பணியாளர்களுக்கு முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாக்காளர்கள் வாக்களிக்க கொடுக்கப்படும் ஒரு முறை உபயோகிக்க கூடிய கையுறை வலது கையில் கட்டாயம் அணிய வேண்டும். வாக்குச்சாவடிக்குள் ஒருவர் பின் ஒருவராக செல்ல வேண்டும். வாக்குச்சாவடியில் உள்ள முதல் அலுவலர் முன் வாக்காளர்கள் முககவசத்தை விலக்கி அடையாள அட்டையை பரிசோதிக்க முழுஒத்துழைப்பு கொடுக்க வேண் டும்.
தெர்மல் ஸ்கேனர்
வாக்களித்து வெளியே வந்த பின் உபயோகிக்கப்பட்ட கையுறையை, அதற்கென ஒதுக்கப்பட்ட மருத்துவ கழிவுகளை சேகரிக்கும் வண்ணம் பூசப்பட்ட தொட்டியில் போட்டு விட்டு, அங்குள்ள கிருமி நாசினி மருந்தை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண் டும். வாக்குச்சாவடிகளை கிருமி நாசினி மருந்து கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அதிக உடல் வெப்பநிலை, கொரோனா அறி குறி மற்றும் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் ஒதுக்கப்பட்ட கடைசி ஒரு மணி நேரமான மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ் அல்லது சொந்த வாகனத்தில் வருவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். இதை அந்த பகுதி சுகாதார ஊழியர்கள் கண்காணிப்பார்கள். மேற்கண்ட கடைசி ஒரு மணி நேரத்தில் தேர்தல் பணியாளர்கள், போலீசார் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட முழுகவச உடையை அணிய வேண்டும். பின்னர் உபயோகித்த பாதுகாப்பு கவச உடைகளை அதற்கு என்று ஒதுக்கப்பட்ட மருத்துவ கழிவுகள் சேகரிக்கும் பெட்டியில் போட வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தெர்மல் ஸ்கேனர் கருவி, கிருமி நாசினி மருந்து (சானிடைசர்), முகக்கவசங்கள், கிருமி நாசினி மருந்து, கொரோனா பாதுகாப்பு கவச உடை உள்பட 13 வகையான பொருட்கள் கொண்ட தொகுப்பு அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story