சத்துணவு அமைப்பாளருக்கு ஆயுள் தண்டனை
2 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சத்துணவு அமைப்பாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
2 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சத்துணவு அமைப்பாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பாலியல் தொல்லை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் தங்கச்சாமி. இவர் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த 23-7-2015-ல் இவர் மீது சேத்தூர் போலீஸ் நிலையத்தில், 9 வயதுடைய 2 பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து தங்கச்சாமியை கைது செய்தனர். இதுெதாடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ ேகார்ட்டில் நடந்து வந்தது.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், சத்துணவு அமைப்பாளர் தங்கச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.
Related Tags :
Next Story