மாமல்லபுரத்தில் பண பட்டுவாடாவை தடுத்து நிறுத்தக்கோரி போராட்டம்
மாமல்லபுரத்தில் பண பட்டுவாடாவை தடுத்து நிறுத்தக்கோரி மறியல் போராட்டம் ஈடுபட்டனர்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தல் இன்று நடக்கிறது. மாமல்லபுரத்தில் உள்ள 15 வார்டுகளிலும் குறிப்பிட்ட சில அரசியல் கட்சினர் வாக்காளர்களுக்கு ஓட்டு போடுவதற்காக வார்டுகள் தோறும் பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும், சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த குறிப்பிட்ட கட்சிகளின் சின்னம் பொறித்த விளம்பர நோட்டீஸ்களை மட்டும் விட்டு, விட்டு பா.ம.க. சின்னம் பொறித்த நோட்டீஸ்களை கிழித்து தேர்தல் பணியாளர்கள் ஒருதலை பட்சமாக நடந்து வருவதாகவும், மாமல்லபுரம் பேரூராட்சி தேர்தல் அதிகாரி பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்த கோரியும் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
பணப்பட்டுவாடாவை நிறுத்தக்கோரி கோஷம் எழுப்பினர். உடனே தகவல் அறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் மறியலில் ஈடுபட்ட பா.ம.க. நாம் தமிழர் கட்சியினரை சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போக சொன்னார்கள். அப்போது மாமல்லபுரம் பேரூராட்சி தேர்தல் அதிகாரி பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்தாத வரை நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்றுகூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென பேரூராட்சி நுழைவு வாயிலை முற்றுகையிட்டு பா.ம.க.வினர் கோஷம் எழுப்பினர். அப்போது பா.ம.க.வினர் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் வாக்குவாதம் செய்தனர்.
Related Tags :
Next Story