கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 9 எம்எல்ஏக்கள் உள்பட 17 பேர் மீது வழக்கு


கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட  9 எம்எல்ஏக்கள் உள்பட 17 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 19 Feb 2022 7:41 PM IST (Updated: 19 Feb 2022 7:41 PM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 9 எம்எல்ஏக்கள் உள்பட 17 பேர் மீது வழக்கு


கோவை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கோவையில் தங்கியிருக்கும் வெளியூர்காரர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். 

துணை ராணுவ பாதுகாப்புடன் தேர்தலை நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் பொள் ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், தாமோதரன், அமுல் கந்தசாமி, வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ் மற்றும் அ.தி.மு.க.வினர் கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த அவர்கள் அனைவரும் இரவில் விடுவிக்கப்பட்டனர். 

இந்த நிலையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 8 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 

அ.தி.மு.க.வினர் 17 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல் (143), அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் (341), தொற்று நோய் தடுப்பு சட்டம் (269) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

1 More update

Next Story