தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் ெதாடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் ெதாடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 

காலாவதியான பொருட்கள்

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பெரும்பாலான வணிக நிறுவனங்களில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொது மக்களின் உடல் நலனுக்கு கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதே போல் கேரளாவில் இருந்து கெட்டுப்போன மீன்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. எனவே அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி பொது மக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவதாஸ், கூடலூர்.

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

  கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட நடு கூடலூரில் இருந்து தலைமை தபால் நிலையம் நோக்கி வரும் சாலையோரம் கழிவுநீர் கால்வாய்கள் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பொத்தியபடி நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து சாக்கடை கால்வாயில் உள்ள அடைப்பை சரிசெய்ய வேண்டும்.
  ராஜா, கூடலூர்.

துர்நாற்றம் வீசும் மயானம்

  சுல்தான்பேட்டை ஒன்றியம் வீ.மேட்டூரில் மயானம் உள்ளது. இந்த மயானத்தில் ஆங்காங்கே குப்பை மற்றும் பிளாஸ்டிக் உள்பட ஏராளமான கழிவுகள் கிடக்கிறது. இதனால் அங்கு கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக இறந்தவர்களை புதைக்க வருபவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் இந்த துர்நாற்றத்தால் இங்கு வருபவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மயானத்தை சுத்தப்படுத்த வேண்டும்.
  பாலன், பொள்ளாச்சி.

மின்விளக்குகள் இல்லை

  பொள்ளாச்சி புது பஸ்நிலையம் முன்பு மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரத்தில் அங்கு இருள் சூழ்ந்து இருப்பதால் அங்கு வந்து செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் குற்ற சம்பவங்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து பஸ் நிலையம் முன்பு உடனடியாக மின்விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்.
  பாஸ்கரன், மகாலிங்கபுரம்.

வீணாகும் குடிநீர்

  பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் உள்ள டி.கோட்டாம்பட்டியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. 2 மாதங் களுக்கும் மேல் இதுபோன்று செல்வதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புய உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை சரிசெய்ய வேண்டும்.
  விஜயகுமார், டி.கோட்டாம்பட்டி.

செயல்படாத சிக்னல்கள்

  பொள்ளாச்சி டவுன் பகுதியில் உள்ள சிக்னல்களில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிக்னல் விளக்குகள் பொருத்தப்பட்டன. ஆனால் இதுவரை மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த சிக்னல் செயல்பாட்டுக்கு வராததால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிக்னல்களை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
  தங்கதுரை, பொள்ளாச்சி.

  தினத்தந்தி செய்தி எதிரொலி:
பழுதான சாலை சரிசெய்யப்பட்டது 

  கோவை பாலசுந்தரம் சாலையில் அம்பேத்கர் விடுதி அருகே சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் பயனாக அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து அதை சரிசெய்து உள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
  ரவி கிருஷ்ணா, கோவை.

ஒளிராத மின்விளக்குகள்

  கோவை பீளமேட்டில் இருந்து காந்திமாநகர் செல்லும் வழியில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பல மின்விளக்குகள் ஒளிரவில்லை. இதனால் இரவு நேரத்தில் அங்கு இருள் சூழ்ந்து இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் சில நேரத்தில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து ஒளிராத விளக்குகளை சரிசெய்து ஒளிர செய்ய வேண்டும்.
  கிருஷ்ணராஜன், பீளமேடு.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

  கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து பாலமலை செல்லும் வழியில் வெங்கடேசலு நகர் அய்யப்பன் கோவில் செல்லும் பாதையில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக இந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.
  சிங்காரவேலு, வெங்கடேசலு நகர்.

தெருநாய்கள் தொல்லை

  கோவைப்புதூர் பகுதியில் நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலைகளில் நாய்கள் சுற்றி வருவதால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூராக இருக்கிறது. வீதிக்கு, வீதி தெருநாய்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் குட்டிகளுடன் சுற்றி வரும் நாய்களையும் பார்க்க முடிகிறது. வயதானவர்கள் காலை, மாலை வேளைகளில் நடைபயிற்சி செல்லும் சுதந்திரமாக சுற்றும் நாய்களால் பீதி ஏற்படுகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  தினேஷ்குமார், கோவைப்புதூர்.
  
  


Next Story