கோவையில் கலெக்டர் சமீரன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் வாக்களித்தனர்.
கோவையில் கலெக்டர் சமீரன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் வாக்களித்தனர்.
கோவை
கோவையில் கலெக்டர் சமீரன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் வாக்களித்தனர்.
கலெக்டர்
கோவை மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.
நேற்று காலையில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாகவும், மாலையில் சற்று மந்தமாகவும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களும் தங்களுக்குரிய வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஓட்டுப்போட்டு சென்றனர்.
கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனியார் கல்லூரியில் கலெக்டர் சமீரன் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது
கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.
வாக்காளர்களும் தங்களது வாக்கை பதிவு செய்து தேர்தல் சுமுகமாக நடக்க ஒத்துழைக்க வேண்டும்.
தேர்தல் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக கோவை மாநகராட்சி பகுதியில் 2,700 போலீசார் மற்றும் 20 துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள னர்.
பேரூராட்சி, நகராட்சி பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 3 துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தலை சுமுகமாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.
வாக்குப்பதிவு எந்திர கோளாறுகளை சரி செய்ய தனியார் நிறுவன என்ஜினீயர்கள் 17 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆர்.எஸ்.புரம் அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓட்டு போட்டார்.
அரசியல் பிரமுகர்கள்
கோவை சுகுணாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் காலை 8.30 மணிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஓட்டுப்போட்டார்.
கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுனன் 80-வது வார்டு செல்வபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓட்டுப்போட்டார்.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜோதிபுரம் பள்ளியில் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ. ஓட்டு போட்டார்.
பாரதீய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் டாடாபாத்தில் உள்ள சி.எம்.எஸ். பள்ளியில் ஓட்டுப்போட்டார்.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்
கோவை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள பெண்கள் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஓட்டுப்போட்டார்.
தி.மு.க. கோவை கிழக்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நா.கார்த்திக், பீளமேடு அண்ணாநகரில் உள்ள நேசனல் மாடல் பள்ளியில் தனது மனைவியும், 52-வது வார்டு தி.மு.க. வேட்பாளருமான இலக்குமி இளஞ்செல்வியுடன் வந்து ஓட்டுப் போட்டார்.
முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, கோவை கிருஷ்ணா காலனியில் உள்ள ராஜலட்சுமி மில் மேல்நிலைப்பள்ளியில் ஓட்டுப் போட்டார்.
அ.தி.மு.க. புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஆர்.சந்திரசேகர், வடவள்ளி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தனது மனைவியும், 38-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளருமான சர்மிளா சந்திரசேகருடன் சென்றுவாக்களித்தார்.
Related Tags :
Next Story