அ.தி.மு.க.வினர் 4 பேர் மீது வழக்கு

கோவையில் அ.தி.மு.க.வினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்றுமுன்தினம் கோவை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது கோவை சிங்காநல்லூர் பகுதியில் சிலர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதாக தகவல் பரவியது.
உடனே தி.மு.க. வார்டு செயலாளர் தீபக்பாபு மற்றும் பலர் அங்கு விரைந்து சென்று தட்டிக் கேட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டது.
இது குறித்து தீபக்பாபு கொடுத்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் அ.தி.மு.க.வை சேர்ந்த சசிகுமார், ஆனந்தன், கனகராஜ், செந்தில் ஆகிய 4 பேர் மீது பொது இடத்தில் அநாகரிகமாக பேசுதல் (294பி), மிரட்டல் விடுத்தல் (506) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






