வாக்காளர் தின போட்டிகளில் பங்கேற்க கலெக்டர் வேண்டுகோள்
வாக்காளர் தின போட்டிகளில் பங்கேற்க கலெக்டர் ராகுல்நாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு,
இந்திய தேர்தல் ஆணையம் 2022-ம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தையொட்டி ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தையும், ஆக்கப்பூர்வமான வெளிப்பாட்டின் மூலம் மீண்டும் வலியுறுத்தும் வகையில் எனது வாக்கு எனது எதிர்காலம், ஒரு வாக்கின் வலிமை என்ற தலைப்பின் கீழ் வினாடி வினா, வாசகம் எழுதும் போட்டி, பாட்டுப்போட்டி, காணொலி காட்சி தயாரித்தல், விளம்பரபடம் வடிவமைப்பு போட்டி என்ற 5 வகையிலான போட்டிகளை தேசிய அளவில் வருகிற மார்ச் மாதம் 15-ந்தேதி வரை நடத்துகிறது.
தேசிய அளவிலான இந்த போட்டியில் நிறுவனம் சார்ந்த வகையினர், தொழில்முறையினர், தொழில்சாராதவர், என 3 வகையிலான பிரிவினர் கலந்து கொள்ளலாம். மேற்படி போட்டிகளில் தேர்வு செய்யப்படும் சிறந்த படைப்புகளுக்கு பின்வருமாறு பரிசுகள் வழங்கப்படும்.
பாட்டுப்போட்டி
நிறுவனம் சார்ந்த வகையினர் முதல் பரிசு ரூ.1 லட்சம், 2-வது பரிசு ரூ.50 ஆயிரம், 3-வது பரிசு ரூ.30 ஆயிரம், சிறப்பினம் ரூ.15 ஆயிரம்.
தொழில்முறையினர் முதல்பரிசு ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.30 ஆயிரம், 3-வது பரிசு ரூ.20 ஆயிரம், சிறப்பினம் ரூ.10 ஆயிரம்.
தொழில்சாராதவர் முதல்பரிசு ரூ.20 ஆயிரம், 2-வது பரிசு ரூ.10 ஆயிரம், 3-வது பரிசு ரூ.7 ஆயிரத்து 500, சிறப்பினம் ரூ.3 ஆயிரம்.
காணொலி காட்சி தயாரிக்கும் போட்டி
நிறுவனம் சார்ந்த வகையினர் முதல் பரிசு ரூ.2 லட்சம், 2-வது பரிசு ரூ.1 லட்சம், 3-வது பரிசு ரூ.75 ஆயிரம், சிறப்பினம் ரூ.30 ஆயிரம்.
தொழில்முறையினர் முதல்பரிசு ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.1 லட்சம், 3-வது பரிசு ரூ.75 ஆயிரம், சிறப்பினம் ரூ.30 ஆயிரம்.
தொழில்சாராதவர் முதல் பரிசு ரூ.30 ஆயிரம், 2-வது பரிசு ரூ.20 ஆயிரம், 3-வது பரிசு ரூ.10 ஆயிரம், சிறப்பினம் ரூ.5 ஆயிரம்.
விளம்பர வடிவமைப்பு போட்டி
நிறுவனம் சார்ந்த வகையினர் முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.30 ஆயிரம், 3-வது பரிசு ரூ.10 ஆயிரம், சிறப்பினம் ரூ.10 ஆயிரம்.
தொழில்முறையினர் முதல் பரிசு ரூ.30 ஆயிரம், 2-வது பரிசு ரூ.20 ஆயிரம், 3-வது பரிசு ரூ.10 ஆயிரம், சிறப்பினம் ரூ.5 ஆயிரம்.
தொழில்சாராதவர் முதல் பரிசு ரூ. 20 ஆயிரம், 2-வது பரிசு ரூ.10 ஆயிரம், 3-வது பரிசு ரூ. 7 ஆயிரத்து 500, சிறப்பினம் ரூ. 3 ஆயிரம்.
வாசகம் எழுதும் போட்டி
முதல் பரிசு ரூ.20 ஆயிரம், 2-வது பரிசு ரூ.10 ஆயிரம், 3-வது் பரிசு ரூ. 7 ஆயிரத்து 500. சிறப்பு பரிசு ரூ. 20 ஆயிரம். (50 நபர்களுக்கு)
வினாடி வினா போட்டி
வெற்றி பெறுபவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் பேட்ஜ் வழங்கப்படும். மேலும் முதல் 3 நிலைகளை கடந்த அனைத்து போட்டியாளர்களுக்கும் கனிணி வழி சான்றிதழ் வழங்கப்படும்.
மேற்படி போட்டிகளில் வயது வரம்பின்றி ஆர்வமுள்ள நபர்கள் அனைவரும் இந்திய தேர்தல் ஆணையத்தின் https://ecisveep.nic.in/contest என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொண்டு மேற்படி தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம்.
மேலும் படைப்பாளர்கள் தங்களது விவரங்கள் மற்றும் படைப்புகளை வருகிற மார்ச் மாதம் 15-ந்தேதிக்குள் voter-contest@eci.gov.in என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் சமர்ப்பிக்க வேண்டும்,
எனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பெருமளவில் பங்கேற்குமாறும். இதேபோன்று. தனியார் நிறுவன பணியாளர்கள், அரசு கழகங்கள், மத்திய அரசு ஊழியர்கள், மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் போட்டிகளில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story