3,860 போலீஸ் பாதுகாப்புடன் இன்று (செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் கிடைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சமீரன் கூறினார்
3,860 போலீஸ் பாதுகாப்புடன் இன்று (செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் கிடைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சமீரன் கூறினார்
கோவை
3,860 போலீஸ் பாதுகாப்புடன் இன்று (செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் கிடைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சமீரன் கூறினார்.
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது
17 மையங்கள்
கோவை மாவட்டத்தில் 802 வார்டு பதவி இடங்களுக்கு இன்று (செவ் வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை 17 மையங்களில் நடைபெறுகிறது.
இதற்காக 496 வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 150 நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
கோவை மாநகரில் 2400 போலீசார், புறநகர் பகுதியில் 1460 போலீசார் என மொத்தம் 3860 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்று முடிவும் உடனடியாக கிடைக்க சிறப்பு ஏற்பாடு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அனுமதி இல்லை
ஒரு வேட்பாளருக்கு 3 முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கை முடிந்த உடன் அவர்கள் வெளியேற வேண்டும். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய பிறகு மட்டுமே ஒளிப்பதிவாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்குச்சாவடி மையத்திற்குள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அனுமதி இல்லை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தின் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மதுக்கடைகள் அடைக்கப்படும்.
மாவட்டத்தின் சூழலை கருத்தில் கொண்டு மாவட்டம் முழுவதும் மதுக்கடைகளை மூடலாமா? என ஆலோசனை செய்து வருகிறோம்.
28 வழக்குகள்
தேர்தல் விதிமீறல்கள் குறித்து கோவை மாவட்டத்தில் இதுவரை 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தேர்தல் பார்வையாளர் கோவிந்த்ராவ், சிறப்பு மேலிட பார்வையாளர் நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story