கூடுவாஞ்சேரி அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதல்; காவலாளி பலி


கூடுவாஞ்சேரி அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதல்; காவலாளி பலி
x
தினத்தந்தி 22 Feb 2022 5:36 PM IST (Updated: 22 Feb 2022 5:36 PM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரி அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதிய விபத்தில் காவலாளி பலியானார்.

காவலாளி

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் பிளாட்டோ (வயது 49). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூர் அருகே மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

சாவு

இதில் தூக்கி வீசப்பட்ட பிளாட்டோ சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story