கும்மிடிப்பூண்டி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை


கும்மிடிப்பூண்டி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 22 Feb 2022 7:22 PM IST (Updated: 22 Feb 2022 7:22 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூணடி அடுத்த மாதர்பாக்கத்தை சேர்ந்தவர் வரலட்சுமி (வயது 50). இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மதியம் சாப்பிடுவதற்காக வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு முன்பக்கம் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

வழக்குப்பதிவு

அதேபோல் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள பழவேற்காட்டான் தெருவை சேர்ந்தவர் பெருமாள்(80). நேற்று முன்தினம் யாரும் இல்லாத போது இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனர். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story