பட்டதாரி இளம்பெண் வெற்றி


பட்டதாரி இளம்பெண் வெற்றி
x
தினத்தந்தி 22 Feb 2022 10:50 PM IST (Updated: 22 Feb 2022 10:50 PM IST)
t-max-icont-min-icon

பட்டதாரி இளம்பெண் வெற்றி

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் 7-வது வார்டு பெண்களுக்கு(பொது) ஒதுக்கப்பட்டது. இந்த வார்டை சேர்ந்தவர் கண்ணுச்சாமி. இவரது மகள் நர்மதா(வயது 24). இவர் எம்.ஏ. அரசியல் அறிவியல் படித்து விட்டு, சென்னையில் உள்ள ஒரு அகடாமியில் ஐ.ஏ.எஸ். படிப்பில் சேர பயிற்சி பெற்று வருகிறார். 

இதற்கிடையில் 7-வது வார்டில் தி.மு.க. சார்பில் நர்மதா போட்டியிட்டார். இதே வார்டில் அவருடன் அ.தி.மு.க., அ.ம.மு.க. மற்றும் சுயேச்சை வேட்பாளரும் போட்டியிட்டனர்.  இந்த நிலையில் தி.மு.க. வேட்பாளரான நர்மதா 611 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட மற்ற 3 வேட்பாளர்களும் தோல்வி அடைந்து டெபாசிட் இழந்தனர். முதல் முறையாக பொள்ளாச்சி நகராட்சியில் 24 வயதான இளம் பட்டதாரி பெண் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடதக்கது. 

வெற்றி பெற்ற நர்மதாவிடம் தேர்தல் நடத்தும் அலுவலர் தாணுமூர்த்தி சான்றிதழை வழங்கினார். இதேபோன்று 10-வது வார்டு தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட தனியார் கல்லூரி பேராசிரியை சியாமளா வெற்றி பெற்றார்.


Next Story