46 வது வார்டு வேட்பாளர்கள் போராட்டம்
வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட குளறுபடியால் 46-வது வார்டு வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை
கோவை மாநகராட்சி 100 வார்டுகளுக்கான வாக்கு எண்ணும் பணி தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்தது. அப்போது கோவை ரத்தினபுரி 46-வது வார்டுக்கான வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதனை கண்டித்து அ.தி.மு.க., பா.ஜனதா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, 46-வது வார்டு பூத் எண் 517-ல் பதிவான வாக்குப்பதிவு எந்திரத்தை வாக்கு எண்ணும் அதிகாரிகள் எங்களிடம் காட்டியபோது அதில் மொத்தம் 621 வாக்குகள் பதிவாகி இருந்ததாக காட்டியது. அதன் பிறகு ஒவ்வொருவரும் பெற்ற வாக்கின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக கணக்கீட்டு பார்த்தால் 626 வாக்குகள் பெற்றதாக குளறுபடியாக இருந்தது. எனவே இந்த வார்டில் தேர்தல் செல்லாது என்று அறிவித்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story