சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை நகராட்சிகளை தி.மு.க. வென்றது
சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை நகராட்சிகளை தி.மு.க. வென்றது
காரைக்குடி
சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது. மேலும் 10 பேரூராட்சிகள் தி.மு.க. வசமானது.
சிவகங்கை நகராட்சி(தி.மு.க. வெற்றி)
சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இங்கு மொத்த வாக்குகள் 37,106.. பதிவானவை 24,836. உள்ளாட்சி தேர்தலில் 66.86 சதவீதம் வாக்குகள் பதிவானது. நேற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் இங்குள்ள 27 வார்டுகளில் 11 இடங்களில் தி.மு.க.வும், 5 இடத்தில் அ.தி.மு.க.வும், 3 இடத்தில் காங்கிரசும், 3 இடத்தில் அ.ம.மு.க.வும், 5 இடத்தில் சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளனர்.
காரைக்குடி நகராட்சி(தி.மு.க. வெற்றி)
காரைக்குடி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது. இதில் மொத்தம் 92 ஆயிரத்து 715 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 57 ஆயிரத்து 31 பேர் வாக்களித்தனர். இந்த வார்டுகளுக்கான நடைபெற்ற தேர்தலில் 18 இடங்களில் தி.மு.க.வும், 7 இடங்களில் அ.தி.மு.க.வும், 3 இடங்களில் காங்கிரசும், ஒரு இடத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்றன. மேலும் 7 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
மானாமதுரை நகராட்சி(தி.மு.க. வெற்றி)
மானாமதுரை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. மொத்தம் 25,576 வாக்காளர்கள் உள்ளனர். 18,685 வாக்குகள் பதிவாகின. இங்கு தி.மு.க. 14 இடங்களிலும், அ.தி.மு.க. 5 இடங்களிலும், பா.ஜ.க. ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 7 இடத்திலும் வெற்றி பெற்றனர். மானாமதுரை நகராட்சியாக மாறிய பின்பு நடந்த முதல் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேவகோட்டை நகராட்சி( இழுபறி)
தேவகோட்டை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இங்கு அ.தி.மு.க. 10 இடங்களிலும், தி.மு.க. 5 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், அ.ம.மு.க. 5 இடங்களிலும், சுயேச்சை ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர். இங்கு அ.ம.மு.க. ஆதரவு கிடைக்கும் கட்சியே நகராட்சியை கைப்பற்றும் என்பதால் இழுபறி ஏற்பட்டுள்ளது.
பேரூராட்சிகளில் அதிக அளவில் தி.மு.க. வெற்றி
திருப்பத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் 14 இடங்களை தி.மு.க.வும், 2 இடங்களை காங்கிரசும் என மொத்தம் 16 வார்டுகளை தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 6 இடத்திலும், காங்கிரஸ் 2 இடத்திலும், அ.தி.மு.க. ஒரு இடத்திலும். சுயேச்சைகள் 2 இடத்திலும் வெற்றி பெற்றனர். மேலும் ஒரு வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இளையான்குடி பேரூராட்சியில் 18 வார்டுகளில் தி.மு.க. 10 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களையும், அ.தி.மு.க., அ.ம.மு.க. தலா 1 இடங்களையும், சுயேச்சைகள் 4 இடங்களையும் பெற்றனர்.
கானாடுகாத்தான் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 12 வார்டுகளில் தி.மு.க. 7 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும், சுயேச்சை 2 இடத்திலும், பா.ஜ.க. 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 8-வது வார்டில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யததால் அந்த வார்டில் தேர்தல் நடக்கவில்லை.
புதுவயல் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 8 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும், பா.ஜ.க 1 இடத்திலும், அ.தி.மு.க 2 இடங்களிலும், சுயேச்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளில் 5-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் சேக்கப்பன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து 11 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் தி.மு.க. 9 இடங்களிலும், அ.தி.மு.க. 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.
கண்டனூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 7 இடத்திலும், அ.தி.மு.க. 2 இடத்திலும், அ.ம.மு.க., காங்கிரஸ் தலா 2 இடத்திலும், சுயேச்சைகள் 2 பேரும் வெற்றி பெற்றனர்.
பள்ளத்தூர் பேரூராட்சி யாருக்கு?
சிங்கம்புணரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 14 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், அ.தி.மு.க. 1 இடத்திலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர்.
கண்டனூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 7 இடத்திலும், அ.தி.மு.க., அ.ம.மு.க., காங்கிரஸ் தலா 2 இடத்திலும், சுயேட்சை 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் 9 இடங்களில் வெற்றி பெற்று உள்ளதால் பேரூராட்சியை கைப்பற்றுகிறது.
கோட்டையூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க 7 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 1 இடத்திலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
பள்ளத்தூர் பேரூராட்சியில் தி.மு.க. 5 இடங்களிலும், அ.தி.மு.க. 2 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 1 இடத்திலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். சுயேச்சை உறுப்பினர்கள் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களே இங்கு பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவார்கள் என தெரியவருகிறது.
Related Tags :
Next Story