பேரூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற தம்பதி
பேரூர் பேரூராட்சியில் தம்பதி வெற்றி பெற்றனர்.
பேரூர்
தொண்டாமுத்தூர் உள்பட 7 பேரூராட்சிகளையும் தி.மு.க., கைப்பற்றியது. பேரூர் பேரூராட்சியில் தம்பதி வெற்றி பெற்றனர்.
பேரூரில் வெற்றி பெற்ற தம்பதி
தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பேரூர், தென்கரை, ஆலாந்துறை, பூலுவபட்டி, தொண்டாமுத்தூர், தாளியூர், வேடபட்டி ஆகிய 7 பேரூராட்சிகள் உள்ளது.
இந்த 7 பேரூராட்சியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மருதமலை தேவஸ்தான பள்ளியிலும் நேற்று காலை தொடங்கியது. ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதலே, அனைத்து பேரூராட்சிகளிலும் தி.மு.க., முன்னிலை வகித்தது.
15 வார்டுகளை கொண்ட பேரூர் பேரூராட்சியில் தி.மு.க. 12 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடம் உள்பட மொத்தம் 13 இடங்களை தி.மு.க. கூட்டணி வென்றது. மீதியுள்ள 2 இடங்களில் அ.தி.மு.க. வென்றது. இதில், 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ராதாவும், 3-வது வார்டு தி.மு.க., வேட்பாளராகப் போட்டியிட்ட அண்ணாதுரையும் கணவன், மனைவி ஆவர். இருவரும், அடுத்தடுத்த வார்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. வெற்றி
இதேபோல், தென்கரை பேரூராட்சியில் தி.மு.க., 12 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடமும், மீதியுள்ள 2 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றது. பூலுவபட்டி பேரூராட்சியில் தி.மு.க. 11 இடங்களிலும், பா.ஜ.க. ஒரு இடமும், மீதியுள்ள 3 இடங்களில் அ.தி.மு.க. வும் வெற்றி பெற்றது.
ஆலாந்துறை பேரூராட்சியில் தி.மு.க. 10 இடங்களிலும், காங்கிரஸ். ஒரு இடமும், சுயேச்சை ஒரு இடமும், மீதியுள்ள 3 இடங்களில் அ.தி.மு.க. வும் வெற்றி பெற்றது. தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் தி.மு.க., 12 இடங்களிலும், மீதியுள்ள 3 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றது.
தாளியூர் பேரூராட்சியில் தி.மு.க. 13 இடங்களிலும், மீதியுள்ள 2 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றது. வேடபட்டி பேரூராட்சியில், தி.மு.க., 13 இடங்களிலும், மீதியுள்ள 2 இடங்களில் அ.தி.மு.க. வும் வெற்றி பெற்றன.
Related Tags :
Next Story