கோவை மாநகராட்சியில் டெபாசிட் இழந்த அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்கள்

கோவை மாநகராட்சியில் அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
கோவை
கோவை மாநகராட்சி தேர்தலில் முக்கிய கட்சி வேட்பாளர்கள் நிறைய பேர் டெபாசிட் இழந்தனர். அதாவது பதிவான வாக்குகளில், 6-ல் ஒரு பங்கு, வேட்பாளர் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதைவிட குறைவாக ஓட்டு வாங்கும் வேட்பாளர்களுக்கு டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது.
இந்த வகையில் 2-வது வார்டில் மணி, 8-வது வார்டில் குபேந்திரன், 10-வது வார்டில்ரவிகுமார், 11-வது வார்டில்கார்த்திகேயன், 16-வது வார்டில் ரேவதி, 17-வது வார்டில்அம்பிகா, 22-வது வார்டில் சண்முகசுந்தரம், 25-வது வார்டில்பாலா மணி, 46-வது வார்டில் செந்தில்வேல் ராமசாமி, 54-வது வார்டில்பானுமதி,
55-வது வார்டில் சுபம் மணிகண்டன், வார்டில் சாந்தகுமாரி, 86-வதுவார்டில் முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
இதேபோல் 5, 6, 8, 9, 15-வது வார்டு உள்பட 10-க்கும் மேற்பட்ட வார்டுகளில் பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் டெபாசிட் இழந்து உள்ளனர்.
Related Tags :
Next Story