கோவை மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா கட்சி வேட்பாளர்கள் 86 பேர் டெபாசிட் இழந்தனர்.
கோவை மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா கட்சி வேட்பாளர்கள் 86 பேர் டெபாசிட் இழந்தனர்.
கோவை
கோவை மாநகராட்சி தேர்தலில் 100 வார்டுகளில் 778 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தி.மு.க. கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றியது.
அதில் தி.மு.க. மட்டும் 73 வார்டுகளில் வெற்றிகொடி நாட்டியது. இதனால் தனிப்பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. மேலும் இந்த கட்சியில் இருந்தே பெண் மேயரை தேர்ந்தெடுக்கின்றனர்.
தேர்தலில் அ.தி.மு.க. 99 வார்டுகளில் தனித்து போட்டியிட்டு 3 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 6 வார்டுகளில் அ.தி.மு.க. 3-ம் இடம் பிடித்தது. 17 வார்டுகளில் அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் கிடைக்கவில்லை.
பா.ஜனதா 97 வார்டுகளில் தனித்து போட்டியிட்டு எந்த வார்டிலும் வெற்றிபெறவில்லை.
4 வார்டுகளில் 2-ம் இடம் பிடித்தது. 86 வார்டுகளில் பா.ஜனதா கட்சி வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர்.
இந்த தேர்தலில் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என மொத்தம் 561 பேர் டெபாசிட் இழந்தனர்.
------------
Related Tags :
Next Story