சென்னையில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தி.மு.க. வேட்பாளர்
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 67-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் , அ.தி.மு.க. வேட்பாளரை விட 11 ஆயிரத்து 340 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை மாநகராட்சி தேர்தல் 200 வார்டுகளுக்கான முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. இதில் 153 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் சென்னை மாநகராட்சியை கைப்பற்றியது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 67-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் தாவுத்பீ, அ.தி.மு.க. வேட்பாளரை விட 11 ஆயிரத்து 340 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
இவர் தான் மாநகராட்சி தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் ஆவார். அதற்கு அடுத்தபடியாக அண்ணாநகர் மண்டலத்துக்குட்பட்ட 97-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் கவுன்சிலர் வாசுவின் மனைவி லதா 10 ஆயிரத்து 999 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.
இவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 2-வது இடத்தை பெற்றுள்ளார்.
Related Tags :
Next Story