குப்பை கழிவுகளை அகற்ற மின்கல வாகனங்கள்


குப்பை கழிவுகளை அகற்ற மின்கல வாகனங்கள்
x
தினத்தந்தி 24 Feb 2022 7:09 PM IST (Updated: 24 Feb 2022 7:09 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சியில் குப்பை கழிவுகளை அகற்றுவதற்கு புதிய மின்கல பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு படப்பை ஊராட்சி மன்ற தலைவர் கர்ணன் தலைமை தாங்கினார். குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன் கலந்துகொண்டு 4 புதிய மின்கல பேட்டரி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர்கள் முகம்மது ஆரிப், மொய்தீன் மற்றும் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story