ஜெயலலிதா சிலைக்கு அதிமுக வினர் மாலை அணிவித்து மரியாதை
74-வது பிறந்த நாள் விழாவையொட்டி கோவையில் ஜெயலலிதாவின் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவை
74-வது பிறந்த நாள் விழாவையொட்டி கோவையில் ஜெயலலிதாவின் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஜெயலலிதா பிறந்த நாள்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் விழா கோவை மாவட்டம் முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்கப்பட்டு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து கோவை- அவினாசி சாலையில் உள்ள ஜெயலலிதா உருவச்சிலைக்கு அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் இதய தெய்வம் மாளிகைக்கு வந்து ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
பின்னர் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
வெற்றி வாகை சூடுவோம்
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வினர் செயற்கையாக வெற்றி பெற்று உள்ளனர். நியாயமாக தேர்தல் நடந்து இருந்தால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்று மேயர் பதவியை கைப்பற்றி இருப்பார்கள். அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது. நாங்கள் தொடர்ந்து மக்களுக்காக உழைத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிவாகை சூடி கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை என்பதை நிரூபிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிலாளர் சங்க மாநில தலைவர் வால்பாறை வி.அமீது, மாநகர பொருளாளர் பார்த்திபன், துணைச் செயலாளர் சிங்கை முத்து, பகுதி செயலாளர்கள் டி.ஜெ.செல்வக்குமார், காட்டூர் செல்வராஜ், வெண்தாமரை பாலு, ராஜ்குமார், சிவகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story