நடிகர் அஜித் திரைப்படம் வெளியான தியேட்டர் முன் பெட்ரோல் குண்டுவீச்சு
கோவையில் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியான தியேட்டர் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் வாலிபர் காயம் அடைந்தார். மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தது.
கோவை
கோவையில் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியான தியேட்டர் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் வாலிபர் காயம் அடைந்தார். மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தது.
அஜித் நடித்த திரைப்படம்
நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் நேற்று வெளியானது. இந்த திரைப்படம் கோவை மாவட்டத்தில் 80 தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளது. அங்கு அஜித்தின் கட்-அவுட்டுகள் வைத்தும், பட்டாசு வெடித்தும் ரசிகர்கள் கொண்டாடினர்.
கோவை 100 அடி ரோட்டில் உள்ள கற்பகம் காம்ப்ளக்ஸ் தியேட்டரி லும் வலிமை திரைப்படம் திரையிடப்பட்டது. அங்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்கள் அதிகாலை 4 மணி முதலே அந்த தியேட்டருக்கு வரத்தொடங்கினர்.
மோட்டார் சைக்கிள் எரிந்தது
அங்கு ரசிகர்கள் கூட்டமாக திரண்டு நின்றனர். அப்போது அதி காலை 4.30 மணி அளவில் தியேட்டர் முன்பு திடீரென்று சத்தத்துடன் பாட்டில் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது.பாட்டில் வெடித்து சிதறியதில் அங்கு, பிளக்ஸ் பேனர் கட்டிக் கொண்டு இருந்த கோவை ரத்தினபுரியை சேர்ந்த அஜித் ரசிகர் நவீன் குமார் (வயது 22) என்பவருக்கு காயம் ஏற்பட்டது.
மேலும் தியேட்டர் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு மோட் டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கிருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தியேட்டர் முன்பு பட்டாசு வெடித்ததாக கருதிய நிலையில் பாட்டில் வெடித்து தீப்பற்றி எரிந்ததால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரிய வந்தது.
பெட்ரோல் குண்டுவீச்சு
இது குறித்த தகவலின் பேரில் காட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதைய டுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக் களை ஆய்வு செய்தனர்.
அதில், டாடாபாத் பகுதியில் இருந்து ஜி.பி. சிக்னலை நோக்கி செல் லும் சாலையில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் ெஹல்மெட் அணிந்தபடி வந்து பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீயை பற்றவைத்து தியேட்டர் முன்பு வீசியதும், அது வெடித்து தீப்பற்றி எரியும் காட்சியும் பதிவாகி இருந்தது.
6 பேரிடம் விசாரணை
இதனால் பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் யார்?. அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண் என்ன?. சம்பவம் நடந்த பகுதியில் அதிகாலை நேரத்தில் நடந்த செல்போன் உரையாடல் போன்றவை குறித்துபோலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டு வீச காரணம் என்ன?. அதில் சதித்திட்டம் ஏதும் உள்ளதா?. ரசிகர்கள் மோதலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என்பது உள்ளிட்ட கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் 6 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அஜித்குமார் படம் திரை யிட்ட தியேட்டர் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story