வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க செல்ல வேண்டாம்
காட்டெருமைகள், யானைகள் நடமாட்டம் உள்ளதால் வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு, வனத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
வால்பாறை
காட்டெருமைகள், யானைகள் நடமாட்டம் உள்ளதால் வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு, வனத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
கடும் வெயில்
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இதனால் ஏற்பட்ட வறட்சி காரணமாக காட்டுயானைகள், காட்டெருமைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனப்பகுதிகளை விட்டு வெளியே வந்து தேயிலை தோட்ட பகுதிகளில் நடமாடி வருகின்றன. மேலும் கூடடம், கூட்டமாக நடமாடி வந்த காட்டுயானைகள் ஒன்று சேர தொடங்கி விட்டன.
இந்த யானைகள் கூட்டம் கேரள வனப்பகுதிக்கு செல்லும் நிலை உள்ளது. எஸ்டேட் பகுதிக்கு காட்டுயானைகள் எந்த வழியாக வருகிறது, எப்போது வருகிறது என்பதை கணிக்க முடியாது. இதனால் தேயிலை தோட்ட பகுதிக்கோ, வனப்பகுதிக்கோ பொதுமக்கள் விறகு சேகரிக்க செல்ல வேண்டாம் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
ஒத்துழைப்பு தர வேண்டும்
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
வால்பாறையில் வனப்பகுதிக்கும், தேயிலை தோட்ட பகுதிக்கும் பொதுமக்கள் விறகு சேகரிக்க செல்கின்றனர்.
விறகுகளை சுமந்து வரும்போது காட்டுயானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் திடீரென எதிரே வந்தால் விரைவாக எங்கும் ஒட முடியாது. இதனால் அசம்பாவிதம் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே விறகு சேகரிக்க எஸ்டேட் தொழிலாளர்களும், வால்பாறை நகர் பகுதியை சேர்ந்தவர்களும் செல்ல வேண்டாம். இதை கடைபிடித்தால் உயிர் சேதங்களை தவிர்க்கலாம். எனவே வனத்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story