ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம்


ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 24 Feb 2022 10:47 PM IST (Updated: 24 Feb 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

கம்பம் நகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கம்பம்: 

கம்பம் நகராட்சியில் சுகாதார பணிகளுக்காக 53 நிரந்தர பணியாளர்கள், 107 தனியார் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் திடீரென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த மாதம் சம்பளம் வழங்கக்கோரி நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். இதையடுத்து சுகாதார அலுவலர் சுந்தரராஜன் துப்புரவு பணியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது சம்பளம் ஓரிரு நாட்களில் வழங்கப்படும் என்றார். ஆனால் பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை என்றும், சம்பளம் வழங்கியவுடன் வேலைக்கு செல்வோம் என்று கூறிவிட்டு சென்றனர். 


Next Story