சுங்குவார்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி காவலாளி சாவு; பிணத்துடன் உறவினர்கள் மறியல்


சுங்குவார்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி காவலாளி சாவு; பிணத்துடன் உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 25 Feb 2022 5:45 PM IST (Updated: 25 Feb 2022 5:47 PM IST)
t-max-icont-min-icon

சுங்குவார்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி காவலாளி பரிதாபமாக இறந்தார். பிணத்துடன் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவலாளி சாவு

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த குண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் சிவபிரகாஷ் (வயது 55). இவர் சுங்குவார்சத்திரம் அருகே தனியார் நிறுவனத்தில் காவலாலியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார்.

விடுமுறை என தெரிந்ததையடுத்து ஜோதிலிங்கம் சுங்குவார் சத்திரம் பஜாருக்கு சென்று பின்னர் வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி குன்னம் சாலையில் சிறுமாங்காடு என்னும் இடத்தில் சாலை ஓரமாக இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிவப்பிரகாசம் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவப்பிரகாசத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிணத்துடன் மறியல்

உறவினர்கள் மற்றும் பா.ம.க. மாவட்ட சிறப்பு தலைவர் சங்கர், பாஜக ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் மற்றும் பொதுமக்கள் விபத்து நடந்த சுங்குவார்சத்திரம்-வாலாஜாபாத் சாலையில் சிறுமாங்காடு பகுதியில் சாலை நடுவே பிணத்துடன் ஆம்புலன்சை நிறுத்தி சாலையில் அமர்ந்து விபத்துக்கு காரணமான மின் கம்பத்தால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதனால் உடனடியாக அந்த மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவம் அறிந்த சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் சுங்குவார்சத்திரம் வாலாஜாபாத் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story