ஆக்கி மைதானம் அமைக்க இறக்குமதி செய்த சிந்தட்டிக் விரிப்புகள் தீயில் எரிந்து நாசமானது

ஆக்கி மைதானம் அமைக்க இறக்குமதி செய்த சிந்தட்டிக் விரிப்புகள் தீயில் எரிந்து நாசமானது
கோவை
கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் ஆக்கி மைதானம் அமைக் கும் பணி தொடங்கியது.
ஆனால் நிதிப்பிரச்சினை காரணமாக அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஆக்கி மைதானத்தின் மேல் விரிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான சிந்தட்டிக் விரிப்புகள் இறக்குமதி செய்யப்பட்டது.
அவை, மைதானத்தின் மேல் பகுதியில் ஒட்டப்பட வேண்டும். ஆனால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் அந்த விரிப்புகள் மைதானத்தின் ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை இந்த சிந்தட்டிக் விரிப்புகளில் திடீரென்று தீப்பிடித்தது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமானது.
இது குறித்து தகவல் அறிந்த கோவை வடக்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
அவர்களுடன் மாநக ராட்சி ஊழியர்களும் இணைந்து தீயை அணைத்தனர். ஆனாலும் சிந்தட்டிக் விரிப்புகள் தீயில் எரிந்து நாசமானது.
இது குறித்து ஆக்கி வீரர்கள் கூறும்போது, ஆக்கி மைதானம் அமைக் கும் பணி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால் அந்த பணி இன்னும் முடியாமல் உள்ளது.
மைதானத்தின் மேல் விரிப்பதற்காக வாங்கப்பட்ட சிந்தட்டிக் விரிப்புகள் இதுவரை 3 முறை தீப்பிடித்து எரிந்து உள்ளது. இதனால் மாநகராட்சிக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story






