கோவை மாநகராட்சிக்கு தேர்வு செய்யப்பட்ட 100 கவுன்சிலர்கள் வருகிற 2-ந் தேதி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் பதவி ஏற்கின்றனர் அவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.


கோவை மாநகராட்சிக்கு தேர்வு செய்யப்பட்ட 100 கவுன்சிலர்கள் வருகிற 2-ந் தேதி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் பதவி ஏற்கின்றனர் அவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
x
தினத்தந்தி 25 Feb 2022 8:09 PM IST (Updated: 25 Feb 2022 8:09 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகராட்சிக்கு தேர்வு செய்யப்பட்ட 100 கவுன்சிலர்கள் வருகிற 2-ந் தேதி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் பதவி ஏற்கின்றனர் அவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்


கோவை

கோவை மாநகராட்சிக்கு தேர்வு செய்யப்பட்ட 100 கவுன்சிலர்கள் வருகிற 2-ந் தேதி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் பதவி ஏற்கின்றனர். அவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

கவுன்சிலர்கள் பதவியேற்பு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அதன்படி கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு 778 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குகள் 22-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் 73 வார்டுகளில் தி.மு.க.வினர் வெற்றி பெற்று சாதனை படைத்த னர். காங்கிரஸ் 9 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலா 4 இடங்களிலும், 

அ.தி.மு.க., ம.தி.மு.க. தலா 3 இடங்களிலும், எஸ்.டி.பி.ஐ., ம.ம.க. தலா ஒரு இடங்களிலும் கொ.ம.தே.க. 2 இடங்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றன.

கோவை மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடடு வெற்றி பெற்று தேர்வான கவுன்சிலர்கள் 100 பேரும் வருகிற 2-ந் தேதி காலை 10 மணிக்கு ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பதவி ஏற்க உள்ளனர். 

அவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் இதற்காக ஆர்.எஸ்.புரம் கலையரங்கம் தயார் செய்யப்பட்டு வருகிறது.

மேயர் தேர்தல்

புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றதும் கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் வருகிற 4-ந் தேதி கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடைபெறுகிறது. 

4-ந் தேதி காலை 9.30 மணிக்கு மேயர் தேர்தல், மதியம் 2.30 மணிக்கு துணை மேயர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேயர், துணை மேயரை புதிய கவுன்சிலர்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள். தி.மு.க.விற்கு 73 கவுன்சிலர்கள் உள்ளதால் தி.மு.க.வை சேர்ந்த மேயர் மற்றும் துணை மேயர் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.


Next Story